7 தொழிலாளர்களுக்கு கரோனா: பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலை மூடல்
பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் 7 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் 7 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது.
கோவை மாட்டம், பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலை ஒன்றில் 186 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 7 தொழிலாளர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரோனா உறுதியானதையடுத்து தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 7 பேர் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 186 தொழிலாளர்களில் 101 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாகவும் மற்றவர்கள் தடுப்பூசி போடவில்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.