தமிழ்நாடு

அவதூறு விடியோ: மீராமிதுனின் ஆண் நண்பரும் கைது

அவதூறு விடியோ வழக்கில் மீராமிதுனின் ஆண் நண்பர் சாம்அபிஷேக்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

அவதூறு விடியோ வழக்கில் மீராமிதுனின் ஆண் நண்பர் சாம்அபிஷேக்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 7ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் நடிகை மீராமிதுன் இணைதளங்களில் தாழ்த்தப்பட்டோரை சாதியை சொல்லி இழிவுபடுத்தி பேசி விடியோ வெளியிட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் கொடுத்திருந்தார், இது சம்மந்தமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீராமிதுன் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புலன்விசாரனை மேற்கொண்டனர், புலன்விசாரணை அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீராமிதுனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் தகவலின் பேரில் கேரளம் விரைந்து சென்று நேற்று ஆலப்புழாவில் ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த மீராமிதுன் என்ற தமிழ்செல்வியை கைது செய்து இன்று தேதி சென்னைக்கு கொண்டுவந்து சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆக. 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்,
புலன்விசாரணையில் மீராமிதுன் என்ற தழிழ்செல்விக்கு இணையதளங்களில் மேற்படி வீடியோ வெளியிடுவதற்கு அம்பத்தூரை சேர்ந்த அவரது நண்பர் சாம்அபிஷேக் உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்று தெரியவந்ததின் பேரில் இன்று அவர் கைது செய்யப்பட்டு புலன்விசாணைக்கு பின்பு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT