தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சையில் 2,080 பேர்: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,080 ஆக உள்ளது. 

திங்கள்கிழமை மாலை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சென்னையில் புதிதாக 205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 235 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில்  இதுவரை மொத்தமாக 5,41,402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது சென்னையில் 2,080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவுக்கு 8,363 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,30,959 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று மட்டும் சென்னை மாநகராட்சியில் 24,454 பேர் உள்பட இதுவரை 35,15,561 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT