சென்னை நாளைக் கொண்டாடும் மாநகராட்சி: பல்வேறு போட்டிகள் அறிவிப்பு 
தமிழ்நாடு

சென்னை நாளைக் கொண்டாடும் மாநகராட்சி: பல்வேறு போட்டிகள் அறிவிப்பு

மெட்ராஸ் டே என்று கூறப்படும் சென்னை நாளைக் கொண்டாடும் வகையில் பல்வேறு போட்டிகளை சென்னை மாநகராட்சி நடத்துகிறது.

DIN


சென்னை: மெட்ராஸ் டே என்று கூறப்படும் சென்னை நாளைக் கொண்டாடும் வகையில் பல்வேறு போட்டிகளை சென்னை மாநகராட்சி நடத்துகிறது.

இது குறித்த விளம்பரங்களை சென்னை மாநகராட்சி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஓவியப் போட்டி மற்றும் புகைப்படப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

போட்டி குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது, மெட்ராஸ் தினத்தையொட்டி ஓவிய மற்றும் புகைப்பட போட்டி இரண்டு தினங்களுக்கு நடைபெறுகிறது.

சிங்காரச்சென்னை என்ற தலைப்பில் நீங்கள் வரைந்த ஓவியங்கள்/ எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள இணைப்பில் நாளை மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியை சென்னை மாநகராட்சி நடத்துகிறது. ஆர்வமுள்வர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT