தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

DIN

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22-ல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது நடந்த வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு உயிரிழப்பு, காயங்கள் ஏற்பட்டன. 
மேலும், பொது மற்றும் தனியாா் சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின. அவை குறித்து விசாரிப்பதற்காக, சென்னை உயா் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தாா். 

இதனிடையே விசாரணை முழுமையாக முடிவடையாததால் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு அருணா கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் கோரிக்கையை ஏற்று விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் பிப்.22, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT