தமிழ்நாடு

உசிலம்பட்டியில் தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக 58 கால்வாய் தண்ணீர் திறக்கக்கோரி மற்றும் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உசிலம்பட்டியில் தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சங்கிலி தலைமையில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் 58 கால்வாய் தண்ணீர் திறக்க வேண்டும் நிரந்தர அரசு ஆணை வழங்கவேண்டும், வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மறுசீரமைப்பு செய்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், 68 சமுதாய மக்கள் நிரந்தர டி.என்.டி சான்றிதழ் வழங்கிட வேண்டும், உசிலம்பட்டி நகர் காவல் நிலையக் கட்டிடங்களை புதிதாக அமைக்க வேண்டும், உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாலை வசதி குடிநீர் வசதி கழிவுநீர் வசதி போன்றவற்றை அமைத்து தர வேண்டும், கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் ஆர்கே ஆனந்தன், புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் மருது ஜீ, மாநிலத் தலைவர் முருகன், மாநில சிறுபான்மை அணி தலைவர் ரபீக், மாநில இளைஞரணி செயலாளர் அலெக்ஸ், மாவட்ட தலைவர் சுரேஷ், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தவசி, மற்றும் மகளிர் அணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT