முகப்பு
தமிழ்நாடு

கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்தார் இல.கணேசன்

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் தனது பாஜக தேசியக் குழு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியை இல.கணேசன் இன்று ராஜிநாமா செய்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
கோப்புப்படம்
பகிர்:

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் தனது பாஜக தேசியக் குழு உறுப்பினர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியை இல.கணேசன் இன்று ராஜிநாமா செய்தார்.

இல. கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு வெளியிட்டது.

இதையடுத்து, சென்னையில் தமிழக பாஜக அண்ணாமலையை நேரில் சந்தித்த இல.கணேசன் தனது பாஜக தேசியக் குழு உறுப்பினர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து கடிதம் வழங்கினார்.

Advertisement

முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர், தமிழக பாஜக அமைப்புச் செயலாளா், தேசியச் செயலாளா், அகில இந்திய துணைத் தலைவா், தமிழக பாஜக தலைவா் உள்ளிட்ட பல பொறுப்புகளை இல.கணேசன் வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments