தமிழ்நாடு

சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வை உணர்ந்தீர்களா?

DIN


சென்னை: சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கத்தால் சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து 296 கி.மீ. கிழக்கு திசையில், சென்னைக்கு சுமார் 322 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

வங்கக் கடலின் சில பகுதிகளில் சரியாக பகல் 12.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதன் தாக்கத்தால், சென்னையில் அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஒரு வேளை, சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வை நீங்கள் உணர்ந்திருந்தால், தேசிய நில அதிர்வு மையத்தின் இணையதளத்தில் உங்களது அனுபவம் குறித்துப் பதிவு செய்யலாம். அதற்கு இங்கே கிளிக் செய்யவும்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT