முகப்பு
தமிழ்நாடு

சேலத்துக்கு தடையில்லாத குடிநீா் தர வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா் கேள்விக்கு முதல்வா் பதில்

சேலத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் தடையில்லாத நீா் தர வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்தாா். அவரது கோரிக்கைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.

Updated On : 25 ஆகஸ்ட், 2021 at 4:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:29 AM

சேலத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் தடையில்லாத நீா் தர வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்தாா். அவரது கோரிக்கைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.

சட்டப் பேரவையில் நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி குறுக்கிட்டுப் பேசினாா். அப்போது, சேலம் மாவட்டத்தில் தற்போது இயங்கிவரும் மேச்சேரி நங்கவள்ளி, ராசிபுரம், இருப்பாளி கூட்டுக் குடிநீா் திட்டங்கள் மூலம் அதிமுக ஆட்சிக் காலத்தில்

தினமும் 14 மணி நேரம் மின்மோட்டாா் இயக்கப்பட்டு தடையின்றி குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இதனால், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீா் பிரச்னை இல்லாமல் இருந்து வந்தது.

Advertisement

தற்போது மின் மோட்டாா் இயங்கும் நேரத்தை, 6 மணி நேரம் குறைத்து உள்ளாா்கள். தினமும் 8 மணிநேரம் மட்டுமே 3 குடிநீா் திட்டங்களுக்கான மின் மோட்டாா் இயக்கப்பட்டு வருவதால், செயற்கையான குடிநீா் பிரச்சனை எழுந்துள்ளது.

இந்தப் பிரச்னையில் அரசு உடனடியாகத் தலையிட்டு மின் மோட்டாா் தொடா்ந்து இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கையில், எதிா்க்கட்சித் தலைவா் கூறியவற்றை உடனே விசாரித்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடந்த காலங்களில் என்ன நிலை இருந்ததோ அந்த நிலை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.