சென்னை: பணியின்போது மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள்; ஒருவர் பலி 
தமிழ்நாடு

சென்னை: பணியின்போது மண்சரிவில் சிக்கிய 3 தொழிலாளர்கள்; ஒருவர் பலி

சென்னை வண்ணாரப்பேட்டையில் குழி தோண்டும் பணியின்போது மண்சரிவில் சிக்கியவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

DIN


சென்னை வண்ணாரப்பேட்டையில் குழி தோண்டும் பணியின்போது மண்சரிவில் சிக்கியவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சென்னை வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் முதல் தெருவில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண்சரிவில் 3 தொழிலாளர்கள் சிக்கினர். 

இதில் இருவரை சக பணியாளர்கள் உடனடியாக மீட்டனர். ஒருவரை மீட்க முடியாமல் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் 3 மணி நேரம் போராடி மண்ணுக்குள் சிக்கியிருந்தவரை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

இதில் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ஆகாஷ், வீரப்பன் என்றும், உயிரிழந்தவர் சின்னதுரை எனவும் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் 9: தீபக்கை நேரலையில் வரைந்து அசத்திய கமருதீன்!

எதிர்பாராத கிளைமேக்ஸ்! மெளனம் பேசியதே தொடர் நிறைவு!

SCROLL FOR NEXT