சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது 
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது

துபையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணி ஒருவரை சோதனை செய்த போது தங்கம் கடத்தி வரப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

DIN

துபையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணி ஒருவரை சோதனை செய்த போது தங்கம் கடத்தி வந்தது  உறுதி செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் 27 வயதான இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்டதால் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தேர்வுகளை எழுத வந்ததாக கூறியவரின்  பெரிய பைகளைகளில்  சமையல் பொருட்களில் சுற்றி எடுத்து வரப்பட்ட தங்கத்தையும் ,சிலிண்டர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும்  அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டவரையும் கைது செய்தனர்.

பின் பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்து எடை போட்டு பார்த்ததில் மொத்தம் 1.38 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் இதன் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் என்றும் கடத்தலில் தொடர்புடையவர்களைப் பற்றிய விசாரணை நடைபெறும் எனவும் சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT