தமிழ்நாடு

இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்புத் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். 

DIN

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அதன்படி, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலையில்லா சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். 

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். 

முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகள் ரூ. 231 கோடி செலவில் கட்டித்தரப்படும்.

அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் ரூ. 6 கோடி என ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

தொழிற்கல்வி படித்து வரும் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். 

ரேஷனில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும். 

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT