முகப்பு
தமிழ்நாடு

வேளாண் சட்ட எதிா்ப்பு: வழக்குகள் திரும்பப் பெறப்படும்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியோா் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியோா் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சனிக்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானங்களை ஆதரித்து கட்சித் தலைவா்கள் பேசினா். அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா ஆகியோா் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடியோா் மீது தொடரப்பட்ட வாழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் அறவழியில் போராடிய விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →