ரெட்டம்பேட்டில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேட்டில் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேட்டில் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பேசி ரெட்டம்பேட்டில் ரூ.12.60 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து ரெட்டம்பேட்டில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன், ஊராட்சி திமுக செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி தலைவர் எல்லம்மாள் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் கௌரி ஹரிதாஸ், ரெட்டம்பேடு பஞ்சாயத்து செயலாளர் குருமூர்த்தி, திமுக நிர்வாகிகள் பாஸ்கரன், திருமலை, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பூமி பூஜைக்கு பிறகு ஒப்பந்ததாரரிடம் பேசிய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை குறித்த காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வில் ரெட்டம்பேடு ஊராட்சி திமுக நிர்வாகிகள் ஆர்.எம்.ரவி, என்.சகாதேவன், ஜி.மெம்யழகன், ஆர்.ஹேமகுமார், ஏ.ஜெயகோபி, எம்.கணபதி, சரத்குமார், முருகேசன், சி.சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.