சுவாமிமலையில் அடைக்கப்பட்டுள்ள கடைகள். 
தமிழ்நாடு

கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு:  சுவாமிமலையில் வியாபாரிகள் கடையடைப்பு

கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவாமிமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவாமிமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுவாமிமலையில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.

தனித் தன்மையுடன் செயல்படும் சுவாமிமலை பேரூராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்க இருக்கும் முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, தொடர்ந்து சுவாமிமலை பேரூராட்சியாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என சுவாமிமலை வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

சுவாமிமலையில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.

இக்கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.29) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுவாமிமலையில் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்துவது என வியாபாரிகள் முடிவு செய்தனர்.

சுவாமிமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகர் சங்கத்தினர்.

இதன்படி, சுவாமிமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுவாமிமலை கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும் இக் கோரிக்கையை வலியுறுத்தி சுவாமிமலையில் வர்த்தக சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT