தமிழ்நாடு

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்: ஆட்சியர்

DIN

கரோனா அதிகரிப்பின் காரணமாக கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் மட்டும் 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் 50 சதவிகிதம் கடைகள் மட்டுமே இயங்கலாம். மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தையில் 50 சதவிகிதம் கடைகள் சுழற்சி முறையில் இயங்கலாம். வாரச்சந்தைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பூங்காக்கள், அனைத்து வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT