தமிழகத்தில் 3 நாள்களுக்கு மழை தொடரும்: வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் செப் 1இல் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஆகஸ்ட் 31 வரை அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.