முகப்பு
தமிழ்நாடு

வெளிநடப்பு செய்த அதிமுகவினா் சாலை மறியல்

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவையிலிருந்து வெளியேறிய அதிமுகவினா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாலையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா். பின்னா் அனைவரும் காவல்துறை வாகனம் மூலமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, திருவல்லிக்கேணி சமூக நல கூடத்தில் வைக்கப்பட்டிருந்தனா். சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவா்கள், பிற்பகல் வேளையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்த மறியலில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 60 போ் மீது அனுமதியின்றி கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.