தமிழ்நாடு

சுருக்குமடி வலை: அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

DIN

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசும் தெரிவித்துள்ளது.

சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று மனுதாரர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழகத்தில் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மற்றுமொரு நாள்! ஈஷா ரெப்பா..

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

ஸ்லோவாக்கியா பிரதமருக்கு நினைவு திரும்பியது

‘கேக் காதலி’ அனசுயா பரத்வாஜ்...!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

SCROLL FOR NEXT