மாரியப்பன் தங்கவேலு 
தமிழ்நாடு

பாராலிம்பிக்ஸ்: தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 

DIN

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 

இதையடுத்து தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், 

டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியா தொடர் வெற்றிகளைக் குவித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரம் தாண்டுதலில் பாராலிம்பிக் பதக்கம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு,

உயரம் தாண்டுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் முறையே வெண்கலம் வென்றுள்ள சரத் குமார் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகிய மூவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், கடந்த முறை ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். இதையடுத்து பாராலிம்பிக்ஸில் தொடர்ந்து இருமுறை பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

SCROLL FOR NEXT