தமிழ்நாடு

பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்: தமிழக அரசு

DIN


சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், பள்ளிகள் திறப்பில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்தது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு வாதத்தை முன் வைத்தது. மேலும், மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படும், இணையவழியில் பாடங்கள், வகுப்புகள் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT