தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: தற்போதைய நிலவரம்

DIN

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. தலைநகர் சென்னையிலும் விடாது பெய்த மழையினால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் படிப்படியாக இயல்பு நிலை மாறி வருகிறது. 

சென்னையில் இன்னும் சில முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

  • மாம்பலம்-ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை–போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
  • மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
  • வளசரவாக்கம் மெகாமார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ,ஆற்காடு ரோடு செல்ல கேசவர்த்தினி சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.
  • வாணி மஹால் முதல் பென்ஸ்பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
  • மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லுார் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது, மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்நல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.
  • அசோக் நகர் போஸ்டல் காலனி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT