பொள்ளாச்சி: ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம்-கேரளம் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இரண்டு பேருந்துகளும், தத்தம் மங்களத்திற்கு ஒரு பேருந்தும், பரம்பிகுளத்துக்கு ஒரு பேருந்தும், குருவாயூருக்கு இரண்டு பேருந்துகளும், திருச்சூருக்கு ஒரு பேருந்து என ஏழு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதையும் படிக்க | பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு கத்தி வெட்டு
அதேபோல் கேரள அரசு பேருந்துகள் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 10 மணிக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்றும் இயக்கப்பட்டுள்ளது.
தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை தொடங்க வேண்டும் என்று கேரளம் மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்வு
இயக்கத்தின் தலைவர் பேச்சிமுத்து கூறுகையில், தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்ததால் மக்கள் பாதிப்பு அடைந்தனர். தற்போது பேருந்துகள் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக-கேரள அரசுகளுக்கு நன்றி, மொழிச் சிறுபான்மை ஆணையருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.