தமிழ்நாடு

மானாமதுரை: தண்ணீரில் தத்தளிக்கும் பாம்புபிடிக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு உதவும் மக்கள்

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பாம்புபிடிக்கும் தொழில் செய்யும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் அங்குள்ளவர்கள் இரவில் பள்ளிக்கூடத்திலும் பகலில் வீதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இவர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உணவு சமைத்து வழங்குகின்றனர். மானாமதுரையில் பர்மா காலனி பகுதியில் பாம்புபிடிக்கும் தொழில் செய்யும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

தொடர்ந்து பெய்த மழையால் இவர்கள் வசித்த குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அருகேயுள்ள  ஆதனூர் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து தற்போது அவர்கள் வசிக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 

இதனால் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் இரவு நேரங்களில் அருகிலுள்ள அரசு பள்ளியிலும் பகல் நேரத்தில் தங்களது குடியிருப்புக்கு அருகே உள்ள மேடான பகுதியிலும் தங்கியுள்ளனர். 

தண்ணீர் சூழ்ந்துள்ள தங்களது வீடுகளில் சமைக்க முடியாத சூழ்நிலை உள்ளதால் பர்மா காலனி பகுதியில் வசிக்கும்  மக்கள் பாதிக்கப்பட்டுள்ள காட்டு நாயக்கர் சமுதாய மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT