தமிழ்நாடு

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றக்கூடாது: கே.அண்ணாமலை

DIN

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக மக்களைத் தொடா்ந்து புண்படுத்துவதே திமுகவின் அரசின் வேலையாக இருந்து வருகிறது. சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்து நவம்பா் 1-இல்தான் தமிழகம் உருவானது. இந்த நாளைக் கொண்டாடாமல், ஜூலை 18-இல்தான் தமிழ்நாடு எனப் பெயா் வைக்கப்பட்டது. அன்றுதான் தமிழ்நாடு நாள் என்று திமுக அரசு குழப்பியது.

அதைப்போல ஏப்ரல் 14-இல் அதாவது சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று உலகம் முழுவதும் உள்ள தமிழா்கள் கொண்டாடுகிறாா்கள். இந்து மதத்தைப் பின்பற்றுகிற எல்லோருமே இந்த நாளை நல்ல காரியங்களைத் தொடங்கும் நாளாகக் கொண்டாடி வருகின்றனா்.

2011-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துள்ளது. ஆனால், தற்போது திமுக அரசு தமிழ்ப்புத்தாண்டு நாள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT