முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 715 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 715 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 715 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு குறித்த தரவுகளை மாநில நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 715 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,28,350 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 748 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 8,155 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 123
கோவை - 121

மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100-க்கு கீழ் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.