தமிழ்நாடு

கி. வீரமணி பிறந்தநாள்: நேரில் வாழ்த்துக் கூறிய ஸ்டாலின்

DIN

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 89வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

கி. வீரமணியின் இல்லத்துக்கு இன்று காலை நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலினுடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நிகழ்வின் போது, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் வீரமணியின் துணைவியார் வீ. மோகனாம்மாள் ஆகியோர் உள்ளனர்.

முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 89-ஆம் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி. கருணாநிதியின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.

11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக் கொடியை 89-ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT