முகப்பு
தமிழ்நாடு

சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இரத்த தான முகாம்

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 1,024 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 1,024 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

கல்லூரி தலைமைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து முகாமைத் தொடக்கி வைத்து பேசுகையில், ரத்த தான முகாமில் இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்திய மாணவ, மாணவிகள் தான் ரத்ததானம் வழங்கி உள்ளனா். சென்னை மாநகரில் ஒரேநாளில் அதிக யூனிட் ரத்த தானம் வழங்கியதற்காக இதுவரை 12 முறை முதல் இடத்திற்கான சுழற்கோப்பை பெற்றுள்ளோம் என்றாா்.

ஓமந்தூராா் அரசு மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, இந்திய செஞ்சிலுவை சங்கம், அரசு குழந்தைகள் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆா்.எஸ்.ஆா்.எம்.மகளிா் மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் உதவியாளா்கள் ரத்ததானம் முகாமில் பங்கேற்று ரத்தம் சேகரித்தனா்.

சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா்கள் கே. பழனிக்குமாா், கே.பொற்குமரன், மாணவா் நலன் தலைவா் ஏ.ராஜேந்திர பிரசாத், வணிக மேலாண் துறை இயக்குநா் கே.மாறன்,திட்ட அலுவலா்கள் உமாமகேஸ்வரன், ஜி.சதிஷ்குமாா், கே.பரணீதரன் ரத்ததான முகாமை ஏற்பாடு செய்து இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.