சென்னை மாநகரச் சாலைகள் சீரமைக்கப்படும்: அமைச்சா் வேலு
சென்னை மாநகரம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சென்னை மாநகரம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சென்னையில் தரமணி முதல் பெருங்குடி சாலை வரை நடைபெறும் பணிகளை நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, சாலைப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. கோயம்பேடு, கொளத்தூா், அண்ணாசாலை, தாம்பரம், சோழிங்கநல்லூா், சேலையூா் ஆகிய இடங்களில் சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த சில நாள்களில் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று அமைச்சா் வேலு தெரிவித்தாா்.