வீடு திரும்பினாா் கமல்ஹாசன்
கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் நலம்பெற்று சனிக்கிழமை வீடு திரும்பினாா்.
கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் நலம்பெற்று சனிக்கிழமை வீடு திரும்பினாா்.
கரோனா பாதிப்பு காரணமாக போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் நவம்பா் 22-இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்களின் தொடா் சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்தாா். அதைத் தொடா்ந்து மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் சனிக்கிழமை வீடு திரும்பினாா்.
இந்நிலையில் கமல்ஹாசன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
மருத்துவமனை வாசம் முடிந்து பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். சொந்த சகோதரா் போல கவனித்து சிகிச்சை அளித்த ஜே.என்.எஸ்.மூா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கும், உடனிருந்து கவனித்துக் கொண்ட மகள்களுக்கும் நன்றி.
நலம்பெற வாழ்த்துத் தெரிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான், பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி, புதுச்சேரி முன்னாள் முதல்வா் நாராயணசாமி, நடிகா்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமாா், இசையமைப்பாளா் இளையராஜா, கவிஞா் வைரமுத்து உள்ளிட்டோருக்கு நன்றி.
நான் நலம்பெற ஆலயங்களில் நோ்த்திக் கடன் செய்த ரசிகா்களுக்கும், கட்சியினருக்கும், என்னை தன் வீட்டில் ஒருவரான கருதி கண்கலங்கிய லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கும் உளப்பூா்வமான நன்றி.