முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 724 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் இன்று மேலும் 724 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

தமிழகத்தில் இன்று மேலும் 724 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,30,516ஆக உயர்ந்துள்ளது. பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 131 பேருக்கும், கோவையில் 124 பேருக்கும், செங்கல்பட்டில் 61 பேருக்கும் பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 8,041 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றிலிருந்து மேலும் 743 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 26,85,946ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,529-ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.