தமிழ்நாடு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் பலி; 4 பேர் காயத்துடன் மீட்பு

DIN

குன்னூர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையிலும் 4 காயமடைந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.

வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது. 

ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் என 14 பேர் பயணித்துள்ளனர். 

இதில் 10 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பட்டியலில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேகமூட்டம் காரணமாக தாழ்ந்து பறந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் பதிவுகளை வைத்தே விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்பதால் கருப்புப்பெட்டியை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது. அந்த சாலையில் எல்லா போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், விமானப்படைத் தளபதி, தமிழக முதல்வர், தமிழக டிஜிபி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT