தமிழ்நாடு

குன்னூர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

DIN

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர்  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானப்படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

தமிழக சுகாதாரத்துறை சார்பில் கோவையில் இருந்து 6 சிறப்பு மருத்துவக்குழுக்கள் சூலூர் சென்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT