தமிழ்நாடு

தில்லியிலிருந்து வந்தவர்கள் பட்டியல்: விபத்தில் சிக்கினார்களா?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமானப்படை உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

DIN

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானப்படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் சென்ற பயணிகளின் விவரம் வெளியாகியுள்ளது. 

அதாவது தில்லியில் இருந்து சூலூர் சென்ற ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், லெப்டினன்ட் கர்னல் ஹஜிந்தர் சிங் உள்ளிட்டோர் பயணித்துள்ளனர். 

வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சென்ற ஹெலிகாப்டர், குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலை மகர ஜோதிக்கு 35,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி!

ஆங்கிலப் புத்தாண்டு 2026: தமிழகம், சென்னையில் காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்ன..?

ஜன. 6 -ல் அமைச்சரவைக் கூட்டம்!

சுரங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து: 65 பேர் படுகாயம்

தங்கம் விலையில் மாற்றம்: எவ்வளவு குறைந்தது?

SCROLL FOR NEXT