மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையில் இருப்பதால் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடுமின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையில் இருப்பதால் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையில் இருப்பதால் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
2003 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் இருப்பதோடு, மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளது.
எனவே, இந்தச் சட்டத் திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சட்டத் திருத்த மசோதா
மானியங்கள் இன்றி மின் கட்டணம் நிர்ணயித்தல், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்தல், மின் உற்பத்தி - விநியோக நிறுவனங்களுக்கு இடையான ஒப்பந்தங்களை கண்காணிக்க அமைக்கப்படும் ஆணையம் மத்திய அரசின் கீழ் செயல்படுதல், மின் நுகர்வு, விற்பனை மீதான வரியை விதிக்கும் மாநிலத்தின் அதிகாரம் பறிபோதல் ஆகியவற்றினால் மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.