மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஹெலிகாப்டர் விபத்து கடும் அதிர்ச்சியளிக்கிறது: கமல்ஹாசன்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து கடும் அதிர்ச்சியளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

DIN

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து கடும் அதிர்ச்சியளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது. 

ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் என 14 பேர் பயணித்துள்ளனர். 

இதில்  13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் 'முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்’. என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT