புலவர் செ.இராசு, மறைந்த தமிழறிஞர்கள் சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான தொகையை அவர்களின் குடும்பத்தினரிடம் முதல்வர் வழங்கினார்.  
தமிழ்நாடு

தமிழறிஞர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர்

தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

DIN

தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ் அறிஞர்களான சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேசபாகவதர், சங்கர வள்ளி நாயகம் மற்றும் புலவர் செ.இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழறிஞர் புலவர் செ.இராசு மருத்துவச் செலவிற்கு உதவிடும் வகையில் அவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டமைக்கு ரூபாய் 15 இலட்சமும் மற்றும் மறைந்த தமிழறிஞர்களான சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன் மற்றும் புலவர் இளங்குமரனார் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 15 இலட்சம் ரூபாய்,

தமிழறிஞர்கள் முருகேசபாகவதர் மற்றும் சங்கர வள்ளிநாயகம் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய், என மொத்தம் 80 இலட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2021) தலைமைச் செயலகத்தில் வழங்கினார். 

இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT