தமிழ்நாடு

வெலிங்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உடல்

வெலிங்டன் ராணுவ மைதானத்தில் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது.

DIN

வெலிங்டன் ராணுவ மைதானத்தில் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.

இதையடுத்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்களை அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம்  மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரில் உள்ள மேஜர் நாகேஷ் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி செளத்ரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் சூலூருக்கு கொண்டு சென்று ராணுவ விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்: ஜடேஜா அசத்தல்; மே.இ.தீவுகள் நிதான ஆட்டம்!

துவாரகாதீஷ் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு தரிசனம்

இன்பமே... ரகுல் ப்ரீத் சிங்!

இத்தனை கணவர்களா? கவனம் ஈர்க்கும் நிகிலா விமலின் பெண்ணு கேஸ் டீசர்!

‘கூட்ட அறிவியல்’ கொஞ்சமாவது கற்கனும்!

SCROLL FOR NEXT