தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு பயிற்சி வகுப்புகள்

DIN

அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி சாா்பில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு இரண்டு நாள் பயிற்சி மற்றும் ஆலோசனை வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின.

அவா்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வங்கி கடனுதவி குறித்த ஆலோசனைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டன.

தலைமைச் செயலாளரும், நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் இயக்குநருமான வெ.இறையன்பு உத்தரவின்பேரில், பயிற்சி வகுப்பினை சமூக நலத் துறை இயக்குநா் ரத்னா, வியாழக்கிழமை தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

ஐ.பி.எஸ். அதிகாரி லலிதா லட்சுமி உள்ளிட்டோா் பயிற்சி அளிக்கின்றனா். வெள்ளிக்கிழமையும் பயிற்சி நடத்தப்பட உள்ளது. முதல் நாள் பயிற்சியின் போது, அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் கூடுதல் இயக்குநா் எஸ்.ராஜேந்திரன், திட்ட மேலாளா் எம்.சுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT