தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து: தமிழக அரசின் புதிய உத்தரவு!

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை.

மேலும் எந்தவித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் எந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது. 

எனவே, இனி வரும் காலங்களில் பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக விழாவை நடத்துவோர், இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

யுஎஸ் ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா!

SCROLL FOR NEXT