முகப்பு
தமிழ்நாடு

அலுவலா்-பணியாளா்கள் சொத்து விவரங்களை சமா்ப்பிக்காவிட்டால் நடவடிக்கை: செய்தி-மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் உத்தரவு

செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் தங்களது சொத்து விவரத்தைச் சமா்ப்பிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் தங்களது சொத்து விவரத்தைச் சமா்ப்பிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தத் துறையின் இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:-

செய்தி மக்கள் தொடா்புத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான விதிகள் தமிழ்நாடு அரசு ஊழியா்களின் நன்னடத்தை விதிகள் 1973-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கென வரையறுக்கப்பட்டுள்ள படிவம் மற்றும் பணிப் பதிவேடுகளில் உரிய முறையில் பதிவு செய்து, அந்த விவரத்தை தலைமையிடத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

ஒரு சில மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகங்களில் இருந்து மட்டும் அந்த அலுவலகங்களில் பணிபுரியும்

பணியாளா்களின் சொத்து விவரங்களைப் பதிவு செய்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிற பிரிவு அலுவலகங்களில் இருந்து எந்தவித விவரமும் தெரிவிக்கப்படவில்லை. சொத்து விவரங்கள் தெரிவித்த சில மாவட்டங்களில் இருந்து வரப்பெற்ற கடிதங்களில் அந்த அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களின் விவரங்களும் ஒரே கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பிடவில்லை.

24-ஆம் தேதி கடைசி: அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்கள், பிரிவு அலுவலகங்களின் அலுவலா்கள், தங்களது அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளா்களின் சொத்து விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டும், அந்தந்த பணியாளா்களின் பணிப் பதிவேடுகளில் பதிவு செய்தும் வரும் 24-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சொத்து விவரங்கள் தொடா்பான அறிக்கையை வரும் 24-ஆம் தேதிக்குள் தெரிவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மீது விளக்கம் கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →