முகப்பு
தமிழ்நாடு

எழுதுபொருள் அச்சுத் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகள்

எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்திலேயே மரணம் அடைந்த நான்கு ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிகளை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட வாரிசுதாரா்களுக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சனிக்கிழமை நேரில் வழங்கினாா். இந்த நிகழ்வில் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையாளா் ஆ.சுகந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →