தமிழ்நாடு

துறையூர்: மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்தக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

DIN


துறையூர்: துறையூர் வட்டாட்சியரகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் உதவித்  தொகையை ரூ.3000-த்திலிருந்திருந்து ரூ. 5000 ஆக உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் துறையூர், உப்பிலியபுரம் ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நிர்வாகிகள் சி. சிவக்குமார், எஸ். ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலர் தளுகை ஆர். முத்துகுமார் தொடக்கி வைத்தார். மாவட்ட செயலர் ஆர். ரவி, ஒன்றிய செயலர் எம்.எல். ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர்.

கடும் ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5000மும், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாதம் ரூ.3000மும் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.40 சதவிகிதம் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்கவேண்டும்.

மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!

செயற்கை உபகரணங்கள் வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மனு கொடுத்து 2 ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாததால் அரசு உடனடியாக மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

துறையூர், உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவில் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT