புதுக்கோட்டை: நகைக்கடன் முறைகேட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும்ஊரக வளர்ச்சி வங்கியில் நடைபெற்ற நகைக்கடன் பொட்டலங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது ரூ. 1.08 கோடி மதிப்பில் 102 பொட்டலங்கள் இருப்பில் இல்லை.
இதையுடம் படிக்க | நிதி பிரயாஸ் திட்டத்தில் பயனடைய இளைஞர்களுக்கு சாஸ்த்ரா அழைப்பு
இதைத்தொடர்ந்து வங்கிச் செயலர் பி. நீலகண்டன் (53) மற்றும் மேற்பார்வையாளர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட செயலர் பி. நீலகண்டன் புதன்கிழமை காலை கீரனூர் சிவன்தெருவிலுள்ள அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வந்த கீரனூர் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையுடம் படிக்க | மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டி: ஈரோடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை- அமைச்சர் சு.முத்துசாமி வாழ்த்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.