தமிழ்நாடு

நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

DIN

நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, கழிப்பறை கட்டடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் நலமாக உள்ளனர். இதுகுறித்து தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும். கட்டட விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 
இதுபோன்ற விபத்துக்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT