ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளை
ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM
ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என போராடியதற்காக ஆலை ஊழியர்கள் மீது சில வழக்குகள் பதியப்பட்டு கிளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்றது.
இன்று அந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது.
Advertisement
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே போராட்டம் நடைபெற்றது என ஸ்டெர்லைட் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.