முகப்பு
தமிழ்நாடு

பங்காரு அடிகளாரிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

முதல்வர் ஸ்டாலின் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார். 

திமுக தலைவருமான முதல்வருமான மு.க. ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவிற்குச் சென்றபோது, அங்குள்ள ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்றார்.  அதுபோது, பங்காரு அடிகளாரை சந்தித்து நலம் விசாரித்தார். 

ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன் கோ.ப.அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

அதோடு, ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்துக்கான அவசர சிகிச்சைப் பிரிவினையும் திறந்து வைத்தார். அதுபோது அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →