மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,600 கன அடியாக நீடிப்பு
மேட்டூர் அணையின் நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 6,600 கன அடியாக மூன்றாவது நாளாக நீடிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 6,600 கன அடியாக மூன்றாவது நாளாக நீடிக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | ஒமைக்ரான் அதிவேகமாக இரட்டிப்பு
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.