திருச்சி காந்தி சந்தையில் தீ விபத்து 
தமிழ்நாடு

திருச்சி காந்தி சந்தையில் தீ விபத்து

திருச்சி காந்தி சந்தையில் தேநீர் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 5க்கும் மேற்பட்ட கடைகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன.

DIN

திருச்சி: திருச்சி காந்தி சந்தையில் தேநீர் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 5க்கும் மேற்பட்ட கடைகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன.

காந்தி சந்தையில் 300க்கும் மேற்பட்ட காய்கனி மற்றும் பூக்கடைகள் இயங்கி வருகின்றன.

காந்தி சந்தைக்கு நுழைவாயில் பகுதியில் தேநீர் கடை மற்றும் பழக் கடைகள் வருகின்றன. இன்று அதிகாலை தேநீரக கடையில் இருந்த எரிவாயு உருளை வெடித்ததில் முதலில் தீப்பற்றி எரிந்தது.

பின்னர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு பரவி ஐந்துக்கும் மேற்பட்ட  தேநீரக கடைகள் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நவீன உபகரணங்களைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பூக்கடைகள் காய்கனி கடைகளுக்கு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கூடிய காந்தி சந்தைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT