தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

DIN

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்து பிறப்பையொட்டி தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு பிரான் அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.   அந்த வகையில், இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி, நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

குரோம்பேட்டை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இதேபோன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை ஆகிய மாவட்டங்களிலுள்ள தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள முக்கிய தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்னை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பொதுமக்களும் தங்களது வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார்கள் அமைத்து மின்விளக்கு அலங்காரத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவாலயங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து சிறப்பு ஆராதனை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT